என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குழந்தை உயிரிழப்பு"
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கோணாப்பட்டை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 39). இவரது மனைவி நீலா (33). இந்த தம்பதிக்கு பவதாரணி (5). என்ற மகள் இருந்தார்.
உதயகுமார் பெங்களூருவில் சில ஆண்டாக கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் வீட்டிற்கு வந்த உதயகுமார் மீண்டும் வேலைக்கு செல்லாமல் ஊரைச் சுற்றி வந்தார். இதனால் தம்பதியடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனிடையே உதயகுமார் தான் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கிறேன் அதற்கு ரூ. 5 லட்சம் தேவைப்படுகிறது என நீலாவிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய நீலா தனது பெயரில் இருந்த நிலத்தை அடகு வைத்தும் வட்டிக்கு வாங்கியும் ரூ.5 லட்சம் பணத்தை கணவரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட உதயகுமார் வெளிநாடு செல்வதாக கூறி பெங்களூருவுக்கு சென்று தங்கி விட்டார்.
பெங்களூருவில் இருந்து உதயகுமார் தான் நல்ல வேலையில் இருப்பதாகவும் நல்ல சம்பவம் கிடைக்கிறது என்று கூறி அவ்வபோது நீலாவிடம் போன் செய்து பேசியுள்ளார். இனியும் கஷ்டபட தேவையில்லை என்று நிலா எண்ணி வந்தார்.
இந்நிலையில் கணவர் வெளிநாடு செல்லவில்லை பெங்களூருவில் தான் உள்ளார் என்பது நீலாவிற்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நீலா தனது கணவரிடம் இது குறித்து கேட்டார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நீலா நேற்று முன்தினம் தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதை கண்ட உறவினர்கள் 2 பேரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பவதாரணி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நீலாவிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு நீலா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை காந்திமா நகரை சேர்ந்தவர் கார்த்திக். கட்டிட தொழிலாளி. இவரது மகள் ரித்திகா ஸ்ரீ (3). கார்த்திக் வீட்டில் கரையான் தொந்தரவு இருந்தது. இதற்காக அவர் கரையான் மருந்து வாங்கி தெளித்து விட்டு மீதி மருந்தை ஒரு பாட்டிலில் வைத்து உள்ளார்.
இதனை வீட்டில் விளையாடி கொண்டிருந்த ரித்திகா ஸ்ரீ ஜூஸ் என நினைத்து குடித்து விட்டாள். இதில் மயங்கி விழுந்த குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ரித்திகா ஸ்ரீ இறந்தாள்.
இது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆற்காடு அடுத்த பென்னகர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம், கூலி தொழிலாளி. அவரது மனைவி அமலா, தம்பதிக்கு லோகேஸ்வரன் (3), சுதர்சன் (2) என 2 மகன்கள் இருந்தனர். லோகேஸ்வரன் கலவை அருகேயுள்ள பெரும்பள்ளத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான்.
தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற லோகேஸ்வரன் மாலை பள்ளி பஸ்சில் வீட்டிற்கு வந்தான். வீட்டிற்கு அருகே பள்ளி பஸ் நின்றது.
லோகேஸ்வரனை அழைத்து செல்ல அவரது தாய் அமலா குழந்தை சுதர்சனையும் அழைத்து வந்தார்.
லோகேஸ்வரன் பஸ்சில் இருந்து இறங்கியவுடன் டிரைவர் பஸ்சை இயக்கியுள்ளார். அப்போது சுதர்சன் பஸ்சின் முன்னால் ஓடியதை கவனிக்காததால் பஸ் சுதர்சன் மீது ஏறி இறங்கியது.
இதில் உடல் நசுங்கி சுதர்சன் சம்பவ இடத்திலேயே பலியானான். இதனை கண்ட தாய் அமலா கதறி துடித்தார். விபத்துக்கு காரணமான டிரைவரை பிடித்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கி வாழப்பந்தல் போலீசில் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கு காரணமான மேச்சேரியை சேர்ந்த பஸ் டிரைவர் சந்திரனை போலீசார் கைது செய்தனர். தாய் கண் முன்னே பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கத்தார் நாட்டின் தோகா நகரில் இருந்து ஐதராபாத்துக்கு இன்று பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. விமானம் இன்று அதிகாலை ஐதராபாத்தை நெருங்கியபோது, விமானத்தில் பெற்றோருடன் பயணம் செய்த 11 மாத குழந்தையான அர்னவ் வர்மாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் குழந்தையை அவசரம் அவசரமாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.
குழந்தையின் தந்தை அனில் வர்மா இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தார். ஆனால் அவரது குழந்தைக்கு அமெரிக்க பாஸ்போர்ட் இருந்தது. #QuatarAirways #BabyDiesInFlight
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெருங்காப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. இவர் இன்று காலை மண்எண்ணெய் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது ஸ்டவ் திடீரென வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. ரேகாவும், அவரது 10 மாத ஆண் குழந்தை நவீனும் நெருப்பில் சிக்கிக்கொண்டனர். இதில் பலத்த தீக்கயம் அடைந்த தாயும், குழந்தையும் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்